Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளிடம் இருந்து திரும்ப வசூலிக்கப்படும்…. மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து pm-kisan நிதியுதவியை திரும்பப் பெற்று வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Pm-kisan திட்டத்தின் தரப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் தவறாக இணைந்து 2000 வீதம் மூன்று தவணையாக 6000உதவி தொகை பெற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு இதுவரை வழங்கியுள்ள தொகையை திரும்ப வசூலிக்கப்படும் எனவும் அரசு கூறியுள்ளது.

Categories

Tech |