அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான தாமோதரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கர்ப்பப்பையில் நீர் கட்டி உள்ளது எனவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டால் அவருக்கு உடல்நிலை சரியாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையில் உள்ள நீர் கட்டியை அகற்றி விட்டனர். இதனையடுத்து தனலட்சுமி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்ற போது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து சீழ் வடிந்து கொண்டே இருந்ததால் அவரை மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தனலட்சுமி பரிசோதித்த மருத்துவர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் தனலட்சுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
ஆனால் அங்கு தனலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைக்கேட்ட தனலட்சுமியின் கணவரான தாமோதரன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரின் உடலை வாங்க மறுத்து அங்குள்ள காவல் நிலையத்தின் முன்பு இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் உடல்நிலை சரியில்லாத தனலட்சுமியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த அறுவை சிகிச்சை செய்துள்ளோம். ஆனால் அங்கு தனலட்சுமிக்கு சரியாக அறுவை சிகிச்சை செய்யாததால் அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் தனலட்சுமியின் இறப்பிற்கு தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்தினர் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தனலட்சுமியின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.