தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நாட்கள் மாற்றப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து சென்னை புறப்படும் ரயில் வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் புறப்படும் என்றும், சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்படும் ரயில் புதன், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் புறப்படும் என்றும், இந்த மாற்றம் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.