தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை தமிழக முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
109 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 370 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்துறை சார்பில் 1,500 கோடி ரூபாயில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிட்டார். அதனடிப்படையில் 370 புதிய பேருந்துகள் 109 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
இதனை தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இதை சென்னை மண்டலத்திற்கு 104 பேருந்துகளும் , அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 65 பேருந்துகளும் , மற்றும் சேலம், கும்பகோணம் , மதுரை , விழுப்புரம் , நெல்லை ஆகிய கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.