மனவேதனையில் தச்சு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தச்சுத் தொழிலாளியான கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அ.தி.மு.க.வில் நகர இளைஞர் பாசறை இணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரீஸ்வரன் மற்றும் ஹரிஷ் என்ற 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கும் முத்துலட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முத்துலட்சுமி, கார்த்தியிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் கார்த்திக் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.