Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால்… சலூன் கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனவேதனையில் சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கனகராஜ் பகுதியில் பெர்லின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாசரேத் பகுதியில் உள்ள பஜாரில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பெர்லினுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பெர்லின் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்று தனது மனைவியான சரோஜாவிடம் மீண்டும் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சரோஜா தன்னிடம் பணம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் பெர்லின் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கேட்டபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறில் சரோஜா, பெர்லினிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் பெர்லின் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் பெர்லின் வீட்டில் தனியாக இருந்ததால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பெர்லின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெர்லினின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |