நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவு பகுதியில் 8.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நேற்று வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா தீவில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சுமார் 56 மைல் ( 91 கிலோ மீட்டர் ) தொலைவில் பெர்ரிவில் நகரின் தென்கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு அலாஸ்கா மற்றும் தெற்கு அலாஸ்கா தீபகற்பத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு அந்த எச்சரிக்கையானது நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் இதேபோல 7.5 ரிக்டர் அளவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.