கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்தார். இதையடுத்து பசவராஜ் பொம்மை கர்நாடக புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவரான பசவராஜ் பொம்மையினுடைய மற்றொரு முகம் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது பசவராஜ் பொம்மை வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய் ஒன்று மரணமடைந்துள்ளது. நாயின் இழப்பை தாங்கமுடியாத அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நாய்க்கு இறுதி சடங்குகளை செய்து கதறி அழுகின்றனர். அதே போன்று பசவராஜ் பொம்மையும் அவருடைய நாயின் சடலத்தை தடவி கொடுத்து கதறி அழுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1420431946832744451