ஐரோப்பா செல்லும் பிரிட்டன் மக்களுக்கு வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பாஸ்போர்ட் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் மக்கள் பிற நாடுகளுக்கு செல்லும்போது பயணத்திற்கு முன்பாக தங்கள் பாஸ்போர்ட் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அலுவலகம் கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது தங்களின் கடவுச்சீட்டில் பக்கங்கள் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும்.
அப்படி இல்லையெனில், அதனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அந்த அலுவலகம் தெரிவித்திருக்கிறது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தங்களின் கடவுச்சீட்டு, பயணம் மேற்கொள்ளும் படி சரியாக இருக்கிறதா? என்று சரி பார்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.