Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… மிஷ்கினின் ‘பிசாசு- 2’… வெளியான மிரட்டலான அறிவிப்பு…!!!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு- 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி, யுத்தம் செய், துப்பறிவாளன், சைக்கோ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திகில் படமான பிசாசு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிசாசு-2 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.

Categories

Tech |