பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
New Year. New Beginnings. And a New Release Date! 🌟💕#RadheShyam all set to release in a theatres near you on Makar Sankranti, 14th January 2022
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/FyhaF5kD8W
— UV Creations (@UV_Creations) July 30, 2021
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வருகிற 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.