தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்குவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு, மின்சாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜ உற்பத்தியை நீடிக்க தேவையில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.