Categories
உலக செய்திகள்

சென்னைக்கு ஆபத்து….. ”உயரும் கடல்மட்டம்”… 45 நகரத்துக்கு எச்சரிக்கை…!!

கடல்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை உள்பட 45 இந்திய கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து என்று அறிக்கை வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடல் வெப்பமடைந்து அதன் மூலமாக புவி வெப்பமடைகின்றது என்று சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை அளித்தது.இதில் இன்னும் அதிர்ச்சியான விஷயம் பல சொல்லப்பட்டுள்ளது. அதில் இமயமலை உருகி கடல் மட்டம் உயரும் காரணத்தால் சென்னை, மும்பை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன் செய்வதில் 33, 25, 19,000 கன மைல் அளவு கொண்ட கடல் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேலும் ஐநா சபையும் , நாசாவும் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை ஆராய்ச்சியாளர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புவி வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து 36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழு நடத்திய ஆய்வின் அறிக்கையை ஐநா வெளியிட்டது.

அதில் உள்ள சில எச்சரிக்கை அம்சங்கள் :

♠ பூமி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் கடல் வெப்பம் அடைவது.

♠ இனி வருகின்ற காலங்களில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு குறைத்தால் மட்டுமே மக்களுக்கும் ஏற்படும் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும்.

♠ முன்பை விட கடல் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

♠ கடல் நீரில் அதிகரித்து வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்துள்ளது.

♠ கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கடல் நீர்மட்டம் இரண்டு மடங்காக உயர்ந்து வருகின்றது.

♠ இதனால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள்

♠ அதே போல இமயமலை உருகி கடல் மட்டம் உயர்வதால் இந்தியாவின் 45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படும்

♠ சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது

♠ தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிடும்.

இப்படி பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்  intergovernmental panel on climate change வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |