Categories
உலக செய்திகள்

தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்கள்…. பீதியில் மக்கள்…. தகவல் அளித்த புவியியல் ஆய்வு மையம்…!!

தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கங்களினால் அலாஸ்காவை சுற்றியுள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அமெரிக்கா நாட்டில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்னிக் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 146 கிலோமீட்டர் தொலைவில் நேற்று இரவு 8.32 மணிக்கு சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து பூமியின் ஆழத்தில் இருந்து 44.9 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று அதே மாகணத்தில் உள்ள பெர்ரிவில் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது நேற்று உணரப்பட்டது.

இதனால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு அங்குள்ள மக்களை வேறு இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளனர். இதனை  தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு பின்பு சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. மேலும் பசுபிக் ring of fire பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து அலாஸ்காவில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்படுவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |