ராமநாதபுரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த தச்சு தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சமத்துவபுரத்தில் முத்துராமலிங்கம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வீட்டின் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 70,000 பணம் மற்றும் 4 3/4 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் இதனையறிந்த முத்துராமலிங்கம் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். மேலும் திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.