Categories
உலக செய்திகள்

குற்றவாளியை மடக்கி பிடிக்கும் முயற்சி… காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு வீடியோ..!!

பிரான்சில் குற்றவாளி ஒருவர் காவல்துறையினர் மீது நாயை ஏவி கடிக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு பிரான்சில் உள்ள Corbeil-Essonnes என்ற நகரில் குற்றவாளி ஒருவர் தான் வளர்த்து வந்த mastiff இன வளர்ப்பு நாயை காவல்துறையினர் மீது ஏவி கடிக்க செய்துள்ளார். இதையடுத்து அந்த நாயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளியான அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் காயமடைந்த காவல்துறை அதிகாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது.

Categories

Tech |