Categories
மாநில செய்திகள்

“இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்ற விரும்புகிறேன்”… மன்மோகன் சிங்குக்கு முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..!!

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related image

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பாராளுமன்றத்திலும் அரசியலிலும் டாக்டர் சிங்கின் தலைமையிலிருந்து நமது நாடு தொடர்ந்து பயனடைகிறது. நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் சேவையாற்ற விரும்புகிறேன்.

Categories

Tech |