சாலைகளில் செல்லும்போது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் முன்னால் வைத்து வாகனம் ஓட்ட வைக்கின்றனர் .இதனால் எதிர்பாராத விதமாக அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெற்றோர்கள் சிறுவர்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக போக்குவரத்து அதிகமுள்ள நகரப்பகுதிகளில் இதன் மூலம் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.