நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஆந்திராவில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நாளை (ஜூலை-31) முதல் திரையரங்குகள் திறப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.