Categories
உலக செய்திகள்

நல்ல மாட்டிக்கிட்டியா…. இரையாகிய எலிக்குட்டிகள்…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

இருதலை பாம்புகள் இரையை ஒன்றாக விழுங்கும் காட்சியானது வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்திலுள்ள ஊர்வன இனங்களில் பாம்புக்கு என்ற தனி சிறப்பும் அதே நேரங்களில் பயமும் அனைவர் இடத்தில் உண்டு. மேலும் “பாம்பை கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியையும் அனைவரும் அறிவர். அதே மாதிரியான பாம்பை பற்றிய சுவாரசியமான நிகழ்வு ஒன்றை பிரபல விலங்கின நிபுணரான  Brian Barczyk தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு தலை கொண்ட பாம்புகள் பென் மற்றும் ஜெர்ரி இரையை விழுங்கும் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து இரு தலை பாம்புகள் ஒரே நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாது என்று கூறப்படுகிறது.

https://www.instagram.com/p/CRl6Ha4A0Mg/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

ஆனால் இந்த இரண்டு பாம்புகளும் ஒரே நேரத்தில் எலிக்குட்டிகளை விழுங்குவது சமூக ஊடகத்தில் பரவி அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் ஒன்றரை வருடங்களாக இரண்டு தலைகொண்ட ஆமைகள், பலவண்ண அல்பினோக்கள் என பத்து வகையான அரிய விலங்குகளை வளர்ப்பதாகவும் கூறியுள்ளார். அதிலும் இரண்டு தலை பாம்புகள் கிடைப்பது அரிதானவை. இவை உணவுக்காக ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும். அதனால் இவை உயிருடன் இருப்பதே அரிதானது என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக இதுபோன்ற இரண்டு தலை பாம்புகள் லட்சத்தில் ஒன்றாக பிறப்பதாகக் கூறுகிறார்.

Categories

Tech |