நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓவியம்பாளையத்தில் பொதுப்பணித்துறையி ன் கட்டுப்பாட்டில் இடும்பன்குளம் ஓன்று உள்ளது. இந்நிலையில் இந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளதால் அந்த குளத்தை சீரமைத்து ஹரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அந்த குளத்திற்கு நேரில் பார்வையிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கபிலர்மலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார்.
மேலும் பொத்தனூர் பேரூராட்சியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட பொது அப்பகுதி வழியாக கருங்கல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி சென்றது தெரியவந்த நிலையில் டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சட்ட விரோதமாக கருங்கல் ஏற்றி சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜு, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக டேவிட் அமல்ராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.