Categories
சினிமா தமிழ் சினிமா

Exclusive: சினிமாவில் நடிக்க ஆசையா…? மிக பிரபலம் தமிழ் நடிகர் அழைப்பு…!!!

சங்கர் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாய்ஸ். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது சைத்தான் கி பச்சா, டக்கா, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து புதிதாக ஒப்பந்தமாகியுள்ள தனது 35வது படத்திற்கு வில்லனாக நடிக்க ஆட்கள் வேண்டும் என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த விளம்பரத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “வில்லன் கதாபாத்திரத்தில் 30 முதல் 35 வயதுடைய ஆண் வட இந்தியர் தோற்றத்தில் வேண்டும். மேலும் 35 முதல் 50 வயதுடைய ஆண், 20 முதல் 30 வயது உடைய பெண், ஆறு முதல் எட்டு வயதுடைய குழந்தையும் நடிப்பதற்கு தேவைப்படுவதாக கூறியுள்ளார். விருப்பமுள்ளவர்கள் 5 புகைப்படங்களை [email protected] என்ற மெயிலுக்கோ அல்லது 9626230062 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பலாம் என்றும், புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 15ந் தேதி” என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |