Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு… அரசு பரபரப்பு உத்தரவு….!!!

கேரளாவில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநிலத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேடம் கேரளாவில் இருந்து வருபவர்களிடம் நெகட்டிவ் சான்றுகள் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை உட்பட 17 மாவட்டங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களுக்கு கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். முக கவசங்களை அடிங்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |