Categories
உலக செய்திகள்

உண்மை வெளிவருமா….? இறப்பில் நீடிக்கும் மர்மம்…. அமெரிக்கா பத்திரிக்கை வெளியிட்ட செய்தி…!!

மறைந்த புகைப்பட செய்தியாளரின் இறப்பு குறித்து அமெரிக்கா செய்தி பத்திரிக்கை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டை  தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து ஆப்கான் நாட்டில் ராணுவத்தினருக்கும் த்லீபான்களுக்கும் நடக்கும் தாக்குதல்கள் குறித்து தகவல் சேகரிப்பதற்காக கடந்த 17 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த ராய்டர்ஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர் ஒருவர்  சென்றுள்ளார். இதனை தொடரந்து ஆப்கான் ராணுவத்தினருக்கும் தலீபான்களுக்கும் இடையில் தாக்குதல் எற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இராணுவத்தினருடன் இருந்த செய்தியாளர் டேனிஷ் சித்திக்  கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இவரின் மறைவு குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர்  பேட்டி ஒன்றை அளித்தார். அதில் “எங்களுடைய தாக்குதலின்போது டேனிஷ் சித்திக் அங்கு இருந்தது எங்களுக்கு தெரியாது.மேலும் அவர் எவ்வாறு இறந்தார் என்பதும் எங்களுக்கு தெரியாது.

எங்களை மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இப்போது டேனிஷ் சித்திக் மறைவு குறித்த புதிய தகவல்களை ‘வாஷிங்டன் எக்ஸாமினர்’ என்ற அமெரிக்கா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் “ஸ்பின் போல்டக் பகுதியில் ராணுவத்தினருக்கும் தலீபான்களும் நடந்த தாக்குதலில் டேனிஷ் சித்திக் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அங்கு உள்ள மசூதி ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். இது குறித்து அறிந்த  தாலிபான்கள் அவரின் அடையாள அட்டையை பரிசோதித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து மசூதியின் மீது தாக்குதல் நடத்தி சித்திக்கை வன்முறையாக துன்புறுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதியும் அவரது அணியனரும் தலீபான்களினால் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டனர்” என்று தகவல் வெளியீட்டுள்ளது.

Categories

Tech |