மிகப்பெரிய நீச்சல் குளம் துபாயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் கடற்படை வீரர்கள் குளத்தின் ஆழமான பகுதி வரை சென்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
துபாய் நாத் அல்செபா பகுதியில் டீப் டைவ் என்ற நிறுவனம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்ட நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளது. இந்த நீச்சல் குளமானது ஒலிம்பிக் நீச்சல் குளத்தை போல ஆறு மடங்கு அகலத்தை உடையது. மேலும் நீச்சல் குளத்தில் ஹைபர்பரிக் என்ற ஒரு நகரம் மூழ்கும் அளவு ஆழமான பகுதி ஒன்று உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் ஸ்கூபா டைவிங் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இங்கிலாந்து நாட்டின் கடற்படை வீரர்கள் குழு கடற்படை கப்பலில் துபாய் அலி துறைமுகத்திற்க்கு வந்துள்ளனர். இந்த கப்பலில் 40 கடற்படை வீரர்கள் பயணம் செய்துள்ளனர். இதனிடையே லியாம் புல்மேன் மற்றும் கல்லும் கிளார்க் என்ற கடற்படை வீரர்கள் நீச்சல் குளம் திறக்கப்பட்டது அறிந்து அங்கு சென்று பார்ப்போம் என்ன முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தேவையான நீச்சல் உடைகளுடன் மிகப்பெரிய ஆழமான பகுதி வரை சென்றனர். மேலும் இங்கிலாந்து நாட்டின் ராயல் கடற்படையின் கொடியை கையில் வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டதோடு ஆழமான பகுதியில் செஸ் விளையாட்டிலும் ஈடுபட்டனர்.