பாம்பு கடித்ததால் 3 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் சிங்காரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனிஷ்கா என்ற மூன்று வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனிஷ்கா தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கி இருந்த பாம்பு சிறுமியை கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தனிஷ்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.