Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்படி ஏற்பட்டிருக்கும்….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மலையான்குளம் பகுதியில் தனியார் நூற்பாலையில் பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் இந்த குடோன் முழுவதும் தீ வேகமாக பரவி விட்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குடோனில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |