மது பாட்டில்கள் வாங்கி தர மறுத்ததால் வாலிபர் மற்றொருவரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் தனது உறவினர் சுடலை என்பவருடன் சேர்ந்து முனைஞ்சிப்பட்டி பேச்சியம்மன் கோவில் கிணற்றின் அருகில் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கிணற்றின் ஓரத்திலிருந்த ராமரை சுடலை கிணற்றுக்குள் தள்ளி விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய சுடலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுடலையை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சுடலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் உறவினர்களான நாங்கள் வேலையை முடித்து விட்டு அடிக்கடி மது அருந்துவதற்காக முனைஞ்சிப்பட்டி பேச்சியம்மன் கோவில் கிணற்று பகுதிக்கு செல்வோம் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து கிணற்று பகுதியிலிருந்து இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும்போது ராமர் தனக்கு மதுபாட்டில்கள் வாங்கித் தர மறுத்ததால் கோபமடைந்த நான் அவரை கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன் எனவும், அதனால் அவர் இறந்துவிட்டார் எனவும் சுந்தர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.