தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஜெயமுருகன் என்பவரின் கடையில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது காவல்துறையினர் அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் ஜெயமுருகன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 760 பண்டல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற குற்றத்திற்காக ஜெய முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.