14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதன் பிறகு கார்த்திக் அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது கார்த்திக் தனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.