வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டாலின் காலனி பகுதியில் பெயிண்டரான மதன் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் குமார் தனது தாயிடம் டீ குடித்து விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். இதனையடுத்து மதன்குமார் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாயார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அப்போது மதன் குமாரின் பெற்றோரிடம் சிலர் மந்தித்தோப்பு பகுதியில் வாலிபர் ஒருவர் தலை அறுத்த நிலையில் பிணமாக கிடக்கின்றார் என்று தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி மதன்குமாரின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளனர். அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கழுத்தை அறுத்த நிலையில் கிடந்த மதன்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதன்குமாரை யார் கொலை செய்தது என்றும் எதற்காக கொலை செய்துள்ளனர் என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.