தேனி மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை திறக்கப்படாமல் அலைக்கழித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 29-வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் ஒரு ரேசன்கடை இல்லாததால் பொதுமக்கள் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவது வழக்கம். இதனையடுத்து அப்பகுதி மக்களை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசு 29-வது வார்டு மக்களுக்கு புதிதான ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரையிலும் அந்த ரேஷன் திறக்கப்படாமல் பல்வேறு காரணங்களை கூறி காரணங்களை கூறி கடையை திறக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து 8 வருடங்களாக ரேஷன் கடை கட்டிடம் மூடி இருப்பதால் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றது. மேலும் கட்டப்பட்ட ரேஷன் கடையை உடனடியாக திறக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.