உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தியாவின் சர்வேதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஆகஸ்ட்-31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.