பிரபல நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
காசி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனுஷா. இதையடுத்து விக்ரமின் பீமா படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ரேணிகுண்டா எனும் திரைப்படத்தில் முக்கிய நாயகி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
இந்நிலையில் நடிகை சனுஷா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் சனுஷாவா இது, ஆள் அடையாளமே தெரியலையே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CR3-LYtMy2j/?utm_source=ig_embed&ig_rid=8d8b4328-412f-47bd-a3ff-58fcb7d8b765