தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மேலும் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.