தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மூன்றாவது அறையை தடுக்க மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.