வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் வைபவ். இதை தொடர்ந்து இவர் கோவா, மங்காத்தா, மேயாத மான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்ற படம் உருவாகியுள்ளது. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#EppaPaarthaalum intha paatta kekkudhu manasu…
Here it is, #Aalambana 🧞♂️ first single! ❤️❤️
▶️ https://t.co/OHhII60AE9🎶@hiphoptamizha
🎤@armaanmalik22
🖊@poetpaavijay@koustubhent @dir_parikvijay @actor_vaibhav @paro_nair @sonymusicsouth @proyuvraaj @gobeatroute— KJR Studios (@kjr_studios) July 30, 2021
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். மேலும் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆலம்பனா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘எப்ப பார்த்தாலும்’ என்கிற இந்த கலக்கலான பாடல் வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.