Categories
தேசிய செய்திகள்

39 மருந்துகள் தரமற்றவை…. மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 39 மருந்துகள் தரமற்ற மருந்தாக உள்ளதாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்படுபவை. தென் இந்தியாவை பொருத்தவரை ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தும், கர்நாடகத்தில் தயாரிக்கப்படும் ஒரு மருந்துகள் தரமற்றதாக உள்ளது.

விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அது போலி மருந்துகளாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் மாதத்தில் மட்டும் 681 மருந்துகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. 642 மருந்துகளின் தரம் சரியாக இருந்தது. மீதமிருந்த 39 மருந்துகள் தரமற்றதாக இருந்தது கண்டறியப்பட்டது. இதன் விவரங்களை மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம் அதன் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள cdsco.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Categories

Tech |