பிரிட்டனின் போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ், பிரான்ஸ் நாட்டை அம்பர் பிளஸ் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் பீட்டா மாறுபாடு தொற்று பரவியதால் அம்பர் பிளஸ் பட்டியலில் இணைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் பிரான்ஸ் நாட்டின் ரீயூனியன் தீவில் பீட்டா மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரியூனியன் தீவானது, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிலிருந்து சுமார் 6000 மைல் தூரத்திலிருக்கும் இந்திய பெருங்கடலில் இருக்கிறது.
இந்த ரியூனியன் தீவில் மட்டுமல்லாமல், பிரான்ஸின் வடக்கு பகுதிகளிலும் பீட்டா மாறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தான் தங்களின் தடுப்பூசி திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸை தங்கள் நாட்டிலும் பரவ விடமாட்டோம் என்று கிராண்ட் ஷாப்ஸ் உறுதியாக கூறியுள்ளார்.