புளியோதரை பொடி
தேவையானபொருட்கள் :
புளி – 75 கிராம்
கடலைப்பருப்பு – 1 கப்
தனியா – 1/4 கப்
உளுத்தம்பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
எள்ளு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
வரமிளகாய் – 50 கிராம்
கல் உப்பு – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பு , தனியா , உளுத்தம்பருப்பு, வெந்தயம் , மிளகு , கடுகு , எள்ளு ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை பொரித்து எடுக்க வேண்டும் . வரமிளகாயையும் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். இறுதியில் கல் உப்பையும் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். இவை ஆறியதும் மிக்ஸியில் முதலில் புளியை போட்டு அரைத்து பின் வரமிளகாய் சேர்த்து அரைபட்டதும் அனைத்து பொருட்களையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் . இதனுடன் கடைசியாக மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறினால் புளியோதரை பொடி தயார் !!!