Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்துகொண்ட தங்கை… மனமுடைந்த அண்ணன் செய்த காரியம்… கதறி அழும் பெற்றோர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் தங்கை காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த சகோதரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்துள்ள அம்மையப்பனை அருகில் உள்ள இலங்குடியில் ஜெயராஜ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது தங்கை சில தினங்களுக்கு முன்பு வீட்டின் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் தங்கை ஓடிப்போன துக்கத்தில் செய்ராஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மனவுளைச்சலில் இருந்து மீள முடியாமல் ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்த இளைஞரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மகன் இறந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து சென்ற கொடார்ச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |