பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு இ-போஸ்ட் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மீராபாய்சானு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் சார்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாவட்ட பொதுமக்கள் மீராபாய்சானுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் தபால் துறை இ-போஸ்ட் மூலம் வாழ்த்துக்கள் அனுப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தலைமை தபால் நிலையத்தில் மீராபாய்சானுக்கு தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அஞ்சல் கண்காணிப்பாளரான கோமல்குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணைக் கண்காணிப்பாளரான பிரதீபா முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து இந்த சிறப்பு வசதியை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வாழ்த்துகளை மீராபாய்சானுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிறப்பு கவுண்டர் சனிக்கிழமை வரை செயல்படும் தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்