ஆந்திர மாநிலம், சித்தூர் மருத்துவமனையில் கொரோனா குணமடையாத நோயாளி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் சுகாதாரத் துறை ஊழியர். இவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள பத்மாவதி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரிடம் தான் கொரோனாவில் இருந்து விடுபடுவேணா? என்று அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்வீர்கள் என்று அவரும் கூறியுள்ளார்.
இருப்பினும் குணமடையாமல் மனமுடைந்து காணப்பட்ட அவர் இரண்டாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னலை பெயர்த்து எடுத்து அதன் வழியாக கீழே குதித்து, உடல் சிதறி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மருத்துவர்களிடம் விசாரணை செய்தபோது கிருஷ்ணய்யா பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.