குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் சுப்பிரமணினுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சுப்பிரமணி பெரிய கல்லை எடுத்து சின்ன பெண்ணின் தலையில் போட்டு அவரை கொலை செய்து விட்டார்.
அதன்பிறகு சுப்பிரமணி பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுப்பிரமணி மற்றும் சின்னபொண்ணு ஆகியோரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.