ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று எச்டிஎஃப்சி வங்கி மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக “Cardless cash withdrawal” என்ற திட்டத்தை ஹெச்டிஎப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ஒருநாளைக்கு இதில் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பாகவும், உடனடியாகவும் கார்ட் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான கோரிக்கைகள் 24 மணி நேரத்துக்குப் பின் காலாவதியாகிவிடும். 24 மணி நேரம் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள எச்டிஎப்சி வங்கி அனுமதி அளித்துள்ளது.