தனது குடும்பத்தார் சம்மதத்துடன் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபருக்கு வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள Lombok Tengah பகுதியைச் சேர்ந்த Nur Khusnul Kotimah என்ற பெண்ணுக்கும் Korik Akbar என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் Korik Akbarரின் முன்னாள் காதலி Yunita Ruri இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் Ruri திருமணம் நடைபெறும் இடத்திற்கே விரைந்து வந்துள்ளார். இதனையடுத்து Korik Akbarரிடம் தன்னையும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். இதன் பின்பு Korik தனது குடும்பத்துடன் செய்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இருவரையும் திருமணம் செய்துள்ளார்.
இந்த செய்தி குறித்து அறிந்த அப்பகுதியிலுள்ள உள்ளூர் ஊடகம், சமூக வலைத்தளம், அவர்களின் நண்பர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து Korik கூறுகையில் “இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளது மிகவும் எதிர்பார்க்காத ஒன்று. இதனால் நான் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன். தற்போது எனக்கு வேலை இல்லாமல் இருப்பதால் இரு பெண்களை திருமணம் செய்து கொண்டது சுமையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.