திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பிறகு 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளதால் இலவச தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3,000 டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணத்தில் நேற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த விற்பனை தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து. கூடுதலாக 3000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த காரணத்தினால் பல பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் புரட்டாசி மாதம் விரைவில் வர உள்ளதால் கூடுதல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.