குழந்தை இல்லாத விரக்தியில் சலூன் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர்ராஜ் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தர்ராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.