தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒன்பது இடங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை ஒன்பது இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் அங்காடிகள் இயங்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.