கடுக்காய் மூலிகை தேநீர்
தேவையான பொருட்கள் :
கடுக்காய் பொடி – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 400 மில்லி
பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன்
புதினா இலைகள் – 10
துளசி இலைகள் – 10
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் . பின் இதனை வடிகட்டி பருகினால் கடுக்காய் மூலிகை தேநீர் தயார் !!!